பாகிஸ்தான் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் பாக்.வீரர்களுக்கு அறிவுரை வழங்குவேன்! ரோகித் சர்மா லொள்ளு

மான்செஸ்டர்:

பாகிஸ்தான் பயிற்சியாளராக ஒருவேளை நியமிக்கப்பட்டால் பாக்கிஸ்தான் அணி வீரர்களுக்கு அறிவுரை வழங்குவேன் என்று செய்தியாளரின் கேள்விக்கு நக்கலாக பதில் அளித்தார் இந்திய அணியின்  தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா.

நேற்று இங்கிலாந்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்து 89 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை விரட்டியடித்தது. நேற்றைய வெற்றி காரணமாக  இந்திய அணி நடப்பு உலகக்கோப்பையில் மூன்றாவது வெற்றியை பெற்றுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியில், இந்திய அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்து வருபவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் ரோகித் சர்மா என்பது 100 சதவிகிதம் மறுக்க முடியாத உண்மை.

உலக கோப்பை போட்டியில் சவுத்ஆப்ரிக்கா அணியுடனான ஆட்டத்தின்போது, 122 ரன்களை எடுத்து சாதனை படைத்த ரோகித் சர்மா நேற்றைய பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது 140 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.

இதையடுத்து,  50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது.  ரோகித் சர்மா 140, விராட் கோலி 77,கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து, 337 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் மட்டுமே எடுத்து. 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றியை சுவைத்தது.

நேற்றைய ஆட்டத்தின்போது அசராமல் 140 ரன்களை விளாசி இந்தியா அணியின் வெற்றிக்கு வித்திட்ட ரோகித் சர்மாவுக்கு  ஆட்ட நாயகன் விருது  வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது,  செய்தியாளர் ரோகித் சர்மாவிடம் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.

அதற்கு கிண்டலாக பதில் அளித்த, ரோகித், ஒருவாளை நான் பாகிஸ்தான் பயிற்சியாளரோக நியமிக்கப்படால், பாகிஸ்தான் அணி வீரர்களாக  கண்டிப்பாக அறிவுரை வழங்குவேன் என கூறி னார்.

நேற்றைய ஆட்டத்தின்போது, ரோஹித் சர்மா  113 பந்துகளில் 140 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.