205 ரன்னில் சுருண்ட இலங்கை: இந்தியா அபார பந்துவீச்சு

நாக்பூர்,

ன்று தொடங்கிய இலங்கையுடனான 2வது டெஸ்ட் போட்டியில், இலங்கையை  205 ரன்னில் சுருட்டியது இந்தியா.

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று  தொடங்கியது.

டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இன்றைய போட்டியில், தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய், ரோஹித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டனர்.

முதலில் பேட்டை பிடித்த இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் சமரவிக்ரமா 13 ரன்களில், இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய திரிமண்ணேவும்  9 ரன்களில் வந்த வேகத்தில்,  அஸ்வினின் சுழலில் சிக்கி  போல்டானார்.

அதைத்தொடர்ந்து இலங்கை அணியின்  அனுபவமிக்க வீரர் மேத்யூஸ் நின்று விளையடுவார் என்று எதிர்பார்த்த நிலையில்,  10 ரன்களில் ஜடேஜாவின் பந்து காரணமாக வெளியேறினார்.

தொடர்ந்து விக்கெட்டுகள் சரிய தொடங்கியதால் இலங்கை அணியினர் திணற தொடங்கினர். அயைடுத்து இறங்கிய கருணாரத்னே நின்று ஆடினார். ஆனால் அவரும்  அரைசதம் அடித்த நிலையில்  இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில்  ஆட்டமிழந்தார்.

பின்னர்  தொடர்ந்து இறங்கிய டிக்வெலா 24 ரன்களிலும், ஷனாகா 2 ரன்களிலும் தில்ருவன் பெரேரா 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் சண்டிமாலும் தொடர்ந்து நிதானமாக ஆடி 57 ரன்கள் எடுத்த நிலையில், அஸ்வினின் சுழலில் சிக்கி சின்னாபின்னமானார். இந்த நிலையில் இலங்கை அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது. தொர்ந்து விளையாடி லக்மல் 17 ரன்னில் கேட்ச் கொடத்து வெளியேறியதும், அடுத்த ஓவரிலேயே ஹெராத்தும் ஆட்டமிழக்க இலங்கை அணி 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்-அவுட் ஆனது.

இந்திய அணி சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.