டில்லி,
ந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இன்று டில்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் விரோட் கோலி 156 ரன் எடுத்து களத்தில் உள்ளார். இந்தியா 371 ரன் எடுத்துள்ளது.

இந்தியா இலங்கைக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்ட நேர முடி வில் 4 விக்கெட்டுகளை இழந்து 371 ரன்கள் குவித்துள்ளது. இந்திய  வீரர்  முரளி விஜய் 155 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கேப்டன் கோலி 156 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் களத்தில் இருக்கிறார்.

ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டெஸ்டிலும் இந்தியா இன்னிங்ஸ் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில், 3வது டெஸ்ட் போட்டியான கடைசி போட்டி இன்று நடைபெற்றது. இன்றைய போட்டியின்போது டாஸ் வென்ற கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தொடர்ந்து இந்திய வீரர்களான முரளி விஜய் – தவான் தொடக்க வீரர்களாகக் களமிறக்கப்பட்டனர். ஆனால், தவான் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெரைரா பந்தில் லக்மாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தவான் நான்கு பவுண்டரிகள் அடித்தார். அவரை தொடர்ந்து  புஜாரா களமிறங்கினார். ஆனால், அவரும்  23 ரன் எடுத்திருந்த நிலையில்,  ஹமேஜ் பந்தில் சமரவிக்ரமாவிடம் பிடிபட்டு ஆட்டமிழந்தார்.

அதேநேரத்தில் மறுமுனைவில் விளையாடிய முரளி விஜய் 50 ரன் எடுத்து அரை சதம் எடுத்திருந்த நிலையில்,  கேப்டன் கோலி களமிறங்கினார்.

பின்னர் ஆட்டம் விறுவிறுப்பாக மாறியது. இருவரும் சேர்ந்து பந்தை விளாச தொடங்கினார். இதன் காரணமாக ரன் விகிதம் விறுவிறுவென ஏறியது.

முரளி விஜய் சதம் அடித்தார். இதன் காரணமாக டெஸ்ட் தொடரில்,  தனது 11வது சதத்தை நிறைவு செய்தார். 267 பந்துகளைச் சந்தித்த முரளி விஜய் 155 ரன்கள் அடித்தார். இதில் 13 பவுண்டரிகள் அடங்கும்.

அணியின் ரன்  361 ஆக இருந்தபோது விஜய் ஆட்டம் இழந்தார். இவரது விக்கெட்டை சண்டகன் கைப்பற்றினார்.

இந்நிலையில்  கேப்டன் விராட் கோலியும் தனது பங்குக்கு சதம் விளாசினார். இது இவரின் 20 வது சதமாகும்.

அடுத்து வந்த ரஹானே வந்த வேகத்தில் 5 பந்துகளைச் சந்தித்து 1 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார்.  பின்னர், ரோஹித் சர்மா களம் கண்டார். இவர் 6 ரன்னிலும் கோலி 156 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 371 ரன்கள் அடித்துள்ளது. நாளை இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்கிறது.

இலங்கை தரப்பில் சண்டிகன் 2 விக்கெட்டும் ஹமேஜ், பெரைரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.