இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் 109 ரன்களில் சுருண்ட மே.இ. தீவுகள் அணி

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது 20 ஓவா் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 110 ரன்கள் வெற்றி இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் மேற்கிந்திய தீவுகள் அணி அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

india

இந்தியா, மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதிய முதலாவது 20 ஓவா் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் காா்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தோ்வு செய்தது.

இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்ஸ்மேன்கள் வந்தவேகத்தில் ஆட்டம் இழந்தனா். மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஆலன் அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தாா்.

20 ஓவா்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் சோ்த்துள்ளது. இந்திய அணியின் குல்தீப் யாதவ் 4 ஓவா்களில் 13 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினாா். மேலும் உமேஷ் யாதவ், கலீல் அகமது, பும்ரா, பாண்டியா தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.