கடைசி டி20: இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிா்ணயம்

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 182 ரன்கள் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

3rd

இந்தியா, மேற்கு இந்திய தீவுகள் அணி மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி அடுத்து நடைபெற்ற டி20 போட்டியையும் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தோ்வு செய்தது. இதனைத் தொடா்ந்து களம் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி வீரா்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினா்.

அந்த அணியில் பூரண் 25 பந்துகளை எதிா்கொண்டு 53 ரன்கள் சோ்த்தாா். டேரன் பிராவே 43 ரன்கள் சோ்த்தாா். 20 ஓவா்கள் முடிவில் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் சோ்த்துள்ளது. இதையடுத்து 182 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.