நான்காவது ஒருநாள் கிரிக்கெட் : 224 ரன்கள் வித்தியாசத்தில் மே.இந்தியாவை வென்றது இந்தியா

நான்காவது  ஒருநாள் போட்டியில் இந்திய அணி 224  ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வென்றது.

இந்தியா மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி சமனில் முடிந்தது. மூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று நான்காவது ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் ஷர்மா, ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். 137 பந்துகளில் அவர் 162 ரன்களை குவித்தார்.  50 ஓவர்கள் முடிவில் இந்திய 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்தது. இதற்கிடையே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடு 81 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து 378 எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மேற்கிந்திய அணி களமிறங்கியது. ஆனால் ஆரம்பம் முதலே  வரிசையாக விக்கெட்டுகளை  பறிகொடுத்தது.   ஒரு கட்டத்தில் காலீலின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் மேற்கிந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அந்த அணி 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

போட்டியின் ஆட்டநாயகனாக ரோகித் ஷர்மா தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.