விரைவில் இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் போட்டி

மும்பை

ந்திய அணிகளுக்கும் மேற்கு இந்தியத் தீவு அணிகளுக்கும் விரைவில் கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக செயலாளர் அமிதாப் சௌத்ரி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.   அந்த சந்திப்பில் அவர் இந்திய – மேற்கு இந்தியத் தீவு அணிகளுக்கான முதல் பகல் இரவு டெஸ்ட் பந்தயங்கள் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமிதாப் சௌத்ரி,”நான் இந்திய அணியின் நிர்வாகத்துடன் இது குறித்து கலந்து பேசி உள்ளேன்.    அவர்கள் மேற்கு இந்திய தீவு அணிகளுடன் நமது அணி ஒன்று அல்லது இரண்டு பகல் இரவு டெஸ்ட் போட்டிகளில்  பங்கு பெற ஒப்புக் கொண்டுள்ளனர்.   மற்ற போட்டிகள் ஒரு நாள் போட்டிகலாக நடைபெற உள்ளன.

இந்த டெஸ்ட் போட்டிகள் நடத்த ஐதராபாத் மற்றும் ராஜ்கோட் நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.   மேற்கு இந்தியத் தீவு அணி தனது பயணத் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யாததால் தற்போது இந்த போட்டிகள் நடைபெறும் சரியான தேதிகளை தெரிவிக்க முடியவில்லை”  எனத் தெரிவித்துள்ளார்.