மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசிப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர் தீபக் சஹர் 2 ஓவரில் 3 விக்கெட்டை வீழ்த்தி   சாதனை படைத்தார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சாஹர்  மொத்தம் 4 ஓவர் வீசிய நிலையில் முதல் 2 ஓவரிலேயே 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி மேற்கு இந்திய தீவு அணியினரை அவர்களது சொந்த நாட்டிலேயே ஓட விட்டார்.

மேற்கிந்தியத் தீவில் சுற்றுப்பயணம்  செய்து வரும்  இந்திய கிரிக்கெட் அணி, அங்கு  ஆகஸ்டு 3ந்தேதி  முதல் செப்டம்பர் 3ந்தேதி வரை பல்வேறு போட்டிகளில் ஆடுகிறது. மூன்று டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

தற்போதை யநிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி  தொடரை கைப்பற்றி உள்ளது.‘

கடைசி ஆட்டத்தின்போது, இந்திய  பந்துவிச்சாளர், தீபக் சாஹர் மிகப்பிரமாதமாக பந்துகளை விசினார்.  அவருடைய சுழல் பந்தின் முன்னாள் மேற்கு  இந்தியத்தீவு வீரர்கள் நிற்க முடியவில்லை.  இரண்டு இன்ஸ்விங்கரில்  எவின் லூயிஸ், சிம்ரன், ஹெட்மையரை எல்.பி.டபிள்யூ  செய்து வெளியேற்றிய சாஹர் அடுத்து  தனது பந்துக்கள் மூலம் மீரட்டினார்.

சாஹர் 3 ஓவர் 1 மெய்டன் 4 ரன்கள் 3 விக்கெட் என்று அசத்த மே.இ.தீவுகள் தொடக்கத்திலேயே 14/3 என்று தடுமாறியது. பிறகு பொலார்ட் அதிரடி அரைசதம் பொவெலின் 32 ரன்களுடன் 20 ஒவர்களில் 146/6 என்று முடிந்தது

தொடர்ந்து ஆடிய இந்திய அணி ரிஷப் பந்த்(65), விராட் கோலி (59) ஆகியோரது  நேர்த்தியான ஆட்டத்தில் 19.1 ஓவர்களில் 150/3 என்று வெற்றி பெற்று மே.இ.தீவுகளை ஒயிட்வாஷ் செய்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த, எவின் லூயிஸ், தீபக் சாஹர் முதலிலேயே  மே.இ.தீவுகளை 14/3 என்று குறுக்கியதாலும்,  பிட்ச் ஸ்பின்னுக்கு சற்றே உதவியதாலும் மே.இ.தீவுகள் தங்கள் விருப்பத்துக்கு ரன் குவிப்பில் ஈடுபட முடியவில்லை என்று அங்கலாய்திருந்தார்.

ஆனால்,  வெற்றிக்கு பின்னர் பேசிய கேப்டன் கோலி, ”எல்லா வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்க நினைத்தோம், ஆனால் போட்டியை வெல்வது தான் குறிக்கோளாக இருந்தது. புதிய பந்தில் புவனேஷ்வர் குமார் எந்த அளவுக்கு திறமையாக வீசுவாரோ, அதையே தான் தீபக் சாகரும் செய்தார்,  புதிய பந்தில் எதிர்பார்த்ததை விட அற்புதமாக பந்துவீசினார் என்று பாராட்டினார்.

நாங்கள் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக ஆடினோம். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இதே போன்று விளையாட வேண்டும் என்று இருக்கிறோம். ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் மிகவும் வலுவான அணி. எனவே அந்த போட்டிகளில் மிகவும் கடினமானதாக இருக்கலாம். ஆனாலும் அதை சிறப்பாக எதிர்கொள்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.