டெஸ்ட் போட்டி: பிரித்வி ஷா, புஜாராவின் அபார ஆட்டத்தினால் இந்தியா 180 ரன்கள் குவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் பிரித்வி ஷா, புஜாரா அரைசதம் கடந்து விளையாடி வருகின்றனர். ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

ind

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் இன்று தொடங்கி நடைப்பெறுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. முதலில் களமிறங்கிய பிரித்வி ஷ, புஜாரா ஆகியோரின் சிறப்பான சதத்தால் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை வேகமாக எட்டியுள்ளது.

முதல் உணவு இடைவேளையின் போது இந்தியாவின் பிரித்வி ஷா 74 பந்தில் 75 ரன்களும், புஜாரா 74 பந்தில் 56 ரன்களும் எடுத்துள்ளனர். 35 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்துள்ளது. இளம் வீரரான பிரித்விஷா தனது முதல் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.