டெஸ்ட் மேட்ச்: வெஸ்ட் இன்டிஸ் அணியை பந்தாடும் இந்தியா: இளம்வீரர் பிரித்வி ஷா அதிரடி ஆட்டம்

--

ராஜ்கோட்:

இன்று நடைபெற்ற வரும் வெஸ்ட் இன்டிஸ் மற்றும் இந்திய அணிகளுக்கான டெஸ்ட் தொடரில் முதல்நாள் போட்டியில் இந்திய அணியின் இளம்வயது வீரரான பிரித்விஷா அதிரடியாக ஆடி வருகின்றார். மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை எடுத்துள்ளது.

இளம்வீரர் பிரித்வி ஷா

ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இன்டிஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெறுகிறது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று காலை டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.  இந்திய அணியில் புதுமுகமாக  பிருத்வி ஷா அறிமுகமாகி உள்ளார்.   18 வயதான மும்பை பேட்ஸ்மேன் பிரித்வி ஷா இந்த டெஸ்டில் அறிமுக தொடக்க வீரராக இறங்கி உள்ளார்.

இன்று தற்போது நடைபெற்று வரும் ஆட்டத்தில் புதுமுக வீரரான  பிரித்வி ஷா, புஜாரா 50 ரன்களை கடந்து விளையாடி வருகின்றனர்.

முதல் உணவு இடைவேளையின் போது இந்தியாவின் பிரித்வி ஷா 74 பந்தில் 75 ரன்களும், புஜாரா 74 பந்தில் 56 ரன்களும் எடுத்து 25 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை குவித்துள்ளனர்.

இதன் காரணமாக வெஸ்ட் இன்டிஸ் அணி வீரர்கள் திணறி வருகின்றனர்.

18வயதே ஆகும் பிரித்வி ஷா இந்தியாவின் மிகக்குறைந்த வயதுடைய இளம்வயது 2வது கிரிக்கெட் வீரர். மும்பையை சேர்ந்தவரான இவர் இந்திய அணியின் 293வது பேட்ஸ்ஸ் மேன் என்பது  குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் விஜய் மெஹ்ரான தனது 17 வயதில் முதன்முதலாக இந்திய அணிக்குள் விளையாட வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா அணி வீரர்கள் விவரம்: கோலி (கேப்டன்), ராகுல், பிருத்வி ஷா, புஜாரா, ரகானே, ரிஷப் பன்ட், ஜடேஜா, அஷ்வின், உமேஷ், ஷமி, குல்தீப்

வெஸ்ட் இன்டிஸ் அணி வீரர்கள் விவரம்:  பிராத்வெயிட்(கேப்டன்), பாவெல், ஹெட்மையல், ஹோப், சேஸ், அம்பிரிஸ், டோரிச், பால், பிஷூ, லெவிஸ், கேபிரியேல்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு கணுக்காலில் லேசான காயம் ஏற்பட்டதால் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. கேப்டன் பொறுப்பை பிராத்வெயிட் ஏற்றுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை அந்த அணியில் இடம் பிடித்துள்ள 5 பேர் மட்டுமே இதற்கு முன்பு இந்தியாவில் டெஸ்டில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள்.

கேப்டன் ஜாசன் ஹோல்டர் கூட இனிதான் முதல் முறையாக இந்திய மண்ணில் டெஸ்டில் விளையாட இருக்கிறார்.