ஐநா மனித உரிமை கவுன்சிலில் அதிக வாக்குகளுடன் இந்தியா தேர்வு

ஜெனிவா

நா மனித உரிமை கவுன்சிலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 நாடுகளில் இந்தியா 188 வாக்குகள் பெற்று முதலாவதாக உள்ளது.

ஜெனிவாவை தலைமையகமாக கொண்டு ஐநா மனித உரிமை கவுன்சில் கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கவுன்சிலில் பங்கு பெறும் நாடுகள் மூன்று வருடத்துக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதும் முதல் முறை ஒரு வருடத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 47 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

அதன் பிறகு 2007, 2011 மற்றும் 2014 ஆக மூன்று முறை இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுளது. இந்த கவுன்சிலுக்கு மொத்தம் ஐந்து பகுதிகளில் இருந்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்முறை அவ்வாறு தேவைப்பட்ட 18 நாடுகளுக்குமான உறுப்பினர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வான போதிலும் வழக்கத்துக்காக தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் இந்தியா 188 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.

இந்த தேர்தலில் இந்தியா தான் உலகில் மிகப்பெரிய குடியரசு நாடுகளில் ஒன்று என்பதற்கேற்ப நடந்துக் கொள்ளும் என உறுதி அளித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதால் அது குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என முந்தைய ஐநா மனித உரிமை கவுன்சில் ஆணையர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியா அதிக வாக்குகளுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: India was elected in UN HR commission for 3 years with Highest votes
-=-