Random image

‘முத்தலாக்’ தடை செய்யப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்தது

டில்லி:

த்திய அரசு முத்தாலாக் தடை அவசர சட்டம் அமல்படுத்திய நிலையில், ஏற்கனவே உலகம் முழுவதும் முத்தலாக்குக்கு தடை செய்யப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

முஸ்லிம் மதத்தில்,  கணவர் மனைவியை விவாகரத்து செய்ய பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறை சட்டம், விரோதமானது என்று கடந்த ஆகஸ்டு மாதம் சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு கூறியது.

அதைத்தொடர்ந்து,  முத்தலாக் நடைமுறையை தடை செய்யும் ‘‘முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா’’வை தயாரிக்கப்பட்டு,  பாராளுமன்ற மக்களவையில் மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர்  28-ம் தேதி தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து  இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று மாநிலங்களவையில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை, இந்த நிலையில், மத்திய அரசு அவசர சட்டத்தை  கொண்டு வத்து.

இநத சட்டத்திதுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்த நிலையில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள  பல்வேறு நாடுகளில், இஸ்லாமிய நாடுகள் உள்பட முத்தலாக்-குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. அந்த நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.

முத்தலாக் தடை செய்த நாடுகளும்- வருடமும்.

1. துருக்கி : 1926
2. சைப்ரஸ் : 1926
3. எகிப்து : 1929
4. சூடான் : 1935
5. ஸ்ரீலங்கா : 1951
6. சிரியா : 1953
7. துனிசியா : 1956
8. மொராக்கோ : 1957
9. ஈராக் : 1959
10.பாகிஸ்தான் : 1961
11. ஈரான் : 1967
12. மலேசியா : 1969
13. வங்காள தேசம் : 1971
14. இந்தோனேஷியா : 1974
15. ஜோர்தான் : 1977
16. அல்ஜீரியா : 1984
17. புருனே : 1999
18. யு.எ.இ : 2005
19. கத்தார் : 2006
20. இந்தியா : 2018