கயானா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டியையும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா.

‍மேற்கிந்திய தீவுகள் எடுத்த 146 ரன்கள் என்ற இலக்கை, 19.1 ஓவரில், 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது இந்திய அணி.

டாஸ் வென்ற இந்திய அணி பெளலிங் செய்ய முடிவெடுத்தது. அதன்படி பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பொல்லார்டு 58 ரன்கள் அடித்தார். பாவெல் 32 ரன்கள் சேர்த்தார்.
இந்தியா தரப்பில் தீபக் சஹார் 3 விக்கெட்டுகளும், நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ராகுல் சஹார் 1 விக்கெட் எடுத்தார்.

பின்னர் ஆடிய இந்திய அணியில், பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார். தவான் 3 ரன்களுக்கு வெளியேற, கேப்டன் கோலியும், ரிஷப் பண்ட்டும் அரைசதம் எடுத்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றனர். கோலி 59 ரன்களும், பண்ட் 65 ரன்களும் அடித்தனர்.

மேற்கிந்திய தரப்பில் தாமஸ் 2 விக்கெட்டுகளையும், ஆலன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம், டி-20 தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது இந்திய அணி.