இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் ஒருநாள் போட்டி: அறிமுக வீரராக களமிறங்குகிறார் ரிஷப் பந்த்

கவுகாத்தி:

ந்தியா-வெஸ்ட்இண்டீஸ் இடையே நடைபெற உள்ள  ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் அறிமுக வீரராக ரிஷப் பந்த் களமிறங்குகிறார். ஒருநாள் போட்டிக்கான இந்திய வீரர்கள் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜேகன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய நிலையில்  இரு அணிகளுக்கும் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.

இந்த ஒருநாள் போட்டியின் முதல் போட்டி நாளை கவுகாத்தியில் நடைபெற உள்ளது. விராட்கோலி தலைமை யில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்த போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக ரிஷப் பந்த் களமிறங்க உள்ளார்.

இவர்  அண்மையில் நடைபெற்று முடிந்த  டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி,  இங்கிலாந்துடனான கடைசி டெஸ்டில் சதம், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டியில் இரண்டு முறை 90 ரன்களுக்கு மேல் குவித்தும் இந்திய கிரிக்கெட்ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில், தொடங்க உள்ள ஒருநாள் போட்டியிலும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த போட்டிகளில் ஆடும் 12 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

விராட் கோலி (கேப்டன்),  ஷிகர் தவான், ரோஹித் சர்மா,  அம்பதி ராயுடு, ரிஷப் பந்த், எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், உமேஷ் யாதவ், முகமது ஷமி, சையத் கலீல் அகமது

ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, லோகேஷ் ராகுல், மனீஷ் பாண்டே, டோனி, ரி‌ஷப் பண்ட் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர். பந்து வீச்சில் முகமது சமி, குல்தீப் யாதவ், சாகல், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், கலீல்அகமது ஆகியோர் உள்ளனர்.

மிடில்  வரிசையில் அம்பதி ராயுடு, மனிஷ் பாண்டே, ரி‌ஷப் பந்த்  ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.