இந்த மாதம் இந்தியா இன்னொரு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது : பாகிஸ்தான்

ராச்சி

ம்மாத இடையில் இந்தியா பாகிஸ்தான் மீது மற்றொரு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைசர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வானா பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் தற்கொலை தாக்குதல் நடத்தி 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்களை கொன்றது. அதற்கு பதிலடியாக பிப்ரவரி 27 அன்று இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் அந்த தீவிரவாத இயக்கத்தின் முகாம்கள் அடியோடு அழிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்த தகவலை பாகிஸ்தான் மறுத்து வந்தாலும் இந்த தாக்குதல் நடந்த உடன் இந்தியா மீது எல்லை தாண்டி விமானப்படை தாக்குதல் நடத்தியது. அவர்களை விரட்டிச் சென்ற விமானம்வீழ்த்தப்பட்டு விமானி சிறைபிடிக்கப்பட்டார். உலக நாடுகள் அழுத்தம் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி நேற்று கராச்சியில்  செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போர்து குரேஷி, “எங்களுக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின்ப்டி இந்தியா பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தாக்குதல் அநேகமாக ஏப்ரல் 16 முதல் 20 வரை நடக்கலாம் என தெரிய வந்துள்ளது.

இந்த தகவல் கிடைத்த விவரம் மற்றும் தாக்குதல் நடக்க உள்ள சரியான நேரம் குறித்த எதையும் நான் இப்போது தெரிவிக்க முடியாத நிலையில் இருக்கிறேன். பிரதமர் இம்ரான் கான் ஒப்புதலின் பேரில் இந்த தகவலை பகிர்கிறேன்” என தெரிவித்துள்ளர்.

இந்த தகவல் குறித்து இந்தியா எவ்வித பதில் அறிக்கையும் அளிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published.