இந்தியா மக்கள் தொகையில் 10 ஆண்டுகளில் முதலிடம் பெறும் : ஐ நா அறிவிப்பு

வாஷிங்டன்

ரும் 2026க்குள் இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து முதல் இடத்தை அடையும் என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை மற்றும் விவசாயப் பிரிவு, வரும் பத்தாண்டுகளில் உலக மக்கள் நிலை பற்றிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளது.   அதன் படி, இந்தியா மக்கள் தொகையில் முன்னேறி, 2026க்குள் அதிக மக்கள் தொகை உள்ள நாடாகி, சீனாவை பின்னுக்கு தள்ளிவிடும் என்றும்,  அதே போல் பால் மற்றும் கோதுமை உற்பத்தியில் முதலிடம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது :

”இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகையான 1.3 பில்லியன், இன்னும் 10 ஆண்டுகளில் 1.5 பில்லியன் ஆக உயரும்.  இதனால் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பெறும்.  தற்போதைய பால் உற்பத்தியைப் போல் மூன்று மடங்கு இந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பால் உற்பத்தி பெருகும்.  உலகின் பால் உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதி அளவு இந்தியாவில் உற்பத்தி ஆகும்.

கோதுமை உற்பத்தியில் உலக நாடுகள் அனைத்தையும் விட 11% அதிகம் உள்ள இந்தியா, இந்த 10 ஆண்டுகளில் 46% அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக விளங்கும்.  அதன்படி உலகத்தில் அதிகம் கோதுமை விளையும் நாடாக இந்தியா ஆகும்.”  இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பால், கோதுமையில் முதலிடம் பெறும் என்பது மகிழ்வை தரும் போது, மக்கள் தொகையிலும் முதலிடம் என்பது ஏனோ மகிழ்வை தரவில்லை