இந்தியா இனி போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் : ராஜ்நாத் சிங்

டில்லி

னி இந்தியாவில் இருந்து போர் விமானங்கள் ஏற்றுமதி ஆகும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய  அரசுக்குச் சொந்தமான எச் ஏ எல் நிறுவனம் பெங்களூருவில் அமைந்துள்ளது.  இந்நிறுவனம் தேஜஸ் என்னும் இலகு ரக போர் விமானத்தைத் தயாரித்துள்ளது.  இந்த விமானம் முழு உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டதாகும்.   இந்த விமானத்தின் முதல் பயணத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  விமானப்படை துணை தளபதி என் திவாரி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்த தேஜஸ் விமானத்தில் பயணம் செய்த முதல் இந்திய பாதுகாப்பு அமை8ச்சர் என்னும் பெருமையை ராஜ்நாத் சிங் பெற்றுள்ளார்.  இந்தியத் தயாரிப்பான தேஜஸ் விமானம் மணிக்கு 2005 கிமீ வேகத்தில் பறக்கக்கூடியதாகும்.  தற்போது இந்திய விமானப்படை பயன்படுத்தி வரும் மிக் 21 ரக போர் விமானங்களுக்கு மாற்றாக தேஜஸ் விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “முழுக்க முழுக்க இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவான இந்த தேஜஸ் விமானம் எச் ஏ எல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகும்.   ஏற்கனவே 40 தேஜஸ் விமானங்களுக்கு இந்திய  விமானப்படை எச் ஏ எல் நிறுவனத்துக்கு ஆர்டர்  அளித்துள்ளது.  மேலும் 80 விமானங்கள் வாங்க உள்ளோம்.    இனி இந்தியா போர் விமானங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை அடைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.