டில்லி

காமன் வெல்த் போட்டிகளில் இரு தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாக எழுந்துள்ள புகாரை எதிர்த்து இந்திய பளு தூக்கும் வீரர் சம்மேளனம் வாதாட உள்ளது

கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.   இதில் இந்தியாவை சேர்ந்த சஞ்சிதா சானு இரு போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார்.   மருத்துவ சோதனையில் அவர் ஊக்க மருந்தை உட்கொண்டதாக புகார் கூறப்பட்டது.   அதை ஒட்டி அவர் 4 வருடங்களுக்கு போட்டியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார்.

இது குறித்து இந்திய பளு தூக்கும் வீரர் சம்மேளன செயலர் சகாதேவ் யாதவ், “ஊக்க மருந்து சோதனைகளின் முடிவுகள் எப்போதுமே தாமதமாக வெளியிடுவதன் நோக்கம் என்னவென்று புரியவில்லை.   இது ஒரு சில வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை பழி வாங்கும் செயல் என இந்த சம்மேளனம் கருதுகிறது.   சஞ்சிதா தடை செய்யப்பட்ட எந்த மருந்தையும் உட்கொள்ளவில்லை என நான் நிச்சயமாக கூறுகிறேன்.  விரைவில் சம்மேளனம் அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கும்” என தெரிவித்துள்ளார்.