விரைவில் இந்தியாவில் 100 ஜிபிபிஎஸ் வேக இணையம் : இஸ்ரோ உறுதி

டில்லி

எஸ் ஆர் ஓ (இஸ்ரோ) தலைவர் சிவன் விரைவில் புதிய செயற்கைக் கோள் நிறுவ உள்ளதால் இந்தியாவில் 100 ஜிபிபிஎஸ் வேக இணையம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

இணையம் பயன்படுத்துவோர்களில் அதிகமானோர் இந்தியாவில் உள்ளனர்.   ஆனால் அதே நேரத்தில் இணய வேகத்தை பொறுத்த வரை இந்தியா  கடந்த மார்ச் மாதம் 109 ஆம் இடத்தில் இருந்ததாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.   தற்போது இந்த வேகம் சற்றே அதிகரித்திருந்தாலும் போதுமான அளவுக்கு வேகம் இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்

நேற்று ஒரு பட்டமளிப்பு விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக (இஸ்ரோ) தலைவர் சிவன் கலந்துக் கொண்டு  சிறப்புரை ஆற்றினார்.   சிவன் தனது உரையில், ”இணையம் உபயோகிப்போர் எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் உள்ளது.  இணைய வேகம் சற்றே அதிகரித்தால் வேகத்தில்  76 ஆம் இடத்துக்கு வந்துள்ளது.

ஏற்கனவே இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் கடந்த 2017 ஜுன் மாதம் ஜிசாட் 19 என்னும் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தி உள்ளது.   இந்த வருடம் ஜிசாட் 11 மற்றும் அடுத்த வருடம் ஜிசாட் 29 ஆகிய விண்கலன்களை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இவை இரண்டும் செலுத்தப்பட்ட பின் இந்தியாவில் இணைய வேகம் 100 ஜிபிபிஎஸ் ஆக அதிகரிக்கும்” என தெரிவித்துள்ளார்.