இந்திய பெருங்கடல் அமைதிக்கு இந்தியா முன்னுரிமை : சுஷ்மா ஸ்வராஜ்

னாய், வியட்நாம்

ந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்திய பெருங்கடல் பகுதியில் அமைதியை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா முன்னுரிமை வழங்கும் என தெரிவித்துள்ளார்.

இந்திய பெருங்கடலோர நாடுகளின் மாநாடு வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹனாயில் நடைபெற்றது.   இந்த மாநாட்டில் இந்தியாவின் சார்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றார்.   இந்த மாநாட்டில் சுஷ்மா உரை ஆற்றினார்.   மேலும் வியட்நாம் – மற்றும் இந்தியாவுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் அவர் கையெழுத்திட்டார்.

மாநாட்டில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், “கிழக்கு உலக மாநாடுகள் உலக பொருளாதாரத்தின் உந்து சக்தியாக தற்போது மாறி வருகின்றன.  அதனால் இந்திய பெருங்கடல் பகுதியில் அமைதி நிலவ வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

இந்தப் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவது இந்தியாவின் நோக்கம் இலை.  இந்த பகுதிகளின் அமைதியை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா முன்னுரிமை வழங்கும்.   இந்த பகுதி நாடுகள் ஒன்றுக்கொன்று நல்லுறவுடன் இருக்க வேண்டியது அவசியம்” என உரையாற்றினார்.