னாஜி, கோவா

சீனா திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாகவும் அதற்கு இந்திய ராணுவம் தக்க பதில் அளிக்கும் எனவும் மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் எல்லையான லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் முகாம் இட்டிருந்த சீனப்படைகளை திரும்பப் பெற சீன அரசு ஒப்புதல் அளித்தது  அவ்வாறு கடந்த 15 ஆம் தேதி திரும்பிச் செல்லும் போது திடீர் என ஆணிகள் பொருத்தபட்ட கொடூர ஆயுதங்களால் சீனப்படைகள் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரரகள் மரணமடைந்தனர்.  இது நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்நிலையில் கோவாவில் மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், “இது நாட்டின் பாதுகாப்பு என்பதால் எவ்வித சமாதானமும் செய்துக் கொள்ள முடியாது  நமது நாட்டை யாரும் ஆக்கிரமிக்க விட மாட்டோம். நாட்டை காக்க உயிர் இழந்த வீரர்களுக்கு எனது வீர வணக்கத்தை தெரிவிக்கிறேன்.  அவர்களது மகத்தான தியாகம் என்ரும் வீணாகாது.

இந்த தாக்குதல் சீனப் படையினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்  இதற்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதில் அளிப்பார்கள்.   சீனாவுடன் நாம் பேச்சு வார்த்தைகள் நடத்தி வந்தோம்.  இரு தரப்பு வீரர்களும் 2.5 கிமீ இடைவெளியில் இருந்தனர்.   அவ்வாறு இருக்க நமது எல்லைக்குள் நுழைந்து சீனா தாக்குதல் நடத்தியது மிகவும் வருந்தத்தக்கதாகும்.  சீனத்தர்ப்பிலும் பலர் கொல்லபட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.