2019ல் உத்தரபிரதேசத்தில் இருந்து புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார்….அகிலேஷ் யாதவ்

போபால்:
‘‘2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் உத்தரபிரதேசத்தில் இருந்து புதிய பிரதமர் இந்தியாவுக்கு கிடைப்பார்’’ என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஜ் யாதம் கூறினார்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மத்திய பிரதேச மாநிலத்துக்கு வருகை தந்தார். அப்போது போபாலில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ மத்திய அரசின் கொள்கை மற்றும் முடிவுகளால் மக்கள் தற்போது மகிழ்ச்சியாக இல்லை. அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வேலையில்லா திண்டாடட்டம் போன்றவை மக்களின் கோபத்திற்கான காரணங்களாகும்.

மத்திய பிரதேசத்தில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் கமல்நாத்திடம் இருந்து நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. என்னென்ன விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது? என்பது குறித்து வெளிப்படையாக கூறி இயலாது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில்,‘‘ 47 அரசியல் கட்சிகளை தலைமை ஏற்று நடத்தும் நரேந்திர மோடியால் பிரதமர் வர முடிந்தது. இதேபோல் எதிர்கட்சிகள் கட்சிகள் அமைக்கும் மெகா கூட்டணியால் இது நடக்காது என்று கூறுவதற்கு என்ன காரணம்?. இதற்கான முயற்சியை சமாஜ்வாடி கட்சி தொடங்கி தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இந்தியாவுக்கு உத்தரபிரதேசத்தில் இருந்து புதிய பிரதமர் கிடைப்பார்’’ என்றார்.

பேட்டியின் போது ராகுல்காந்தி பிரதமராக ஆதரிப்பீர்களா? என்ற கேள்விக்கு ராகுல்காந்தி நேரடியாக பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.