இந்தியாவே அதிக முதியோர்களைக் கொண்ட நாடு – எப்போது?

--

புதுடெல்லி: வரும் 2036ம் ஆண்டில் இந்தியா அதிக முதியவர்களைக் கொண்ட நாடாக இருக்குமென்றும், அதேநேரத்தில், இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் வேலை தேடும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும் அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் அமைத்த ஒரு தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில், நடுத்தர மற்றும் சராசரி வயதுள்ள நபர்களின் எண்ணிக்கை 24.9% என்பதாக இருந்தது. ஆனால், அந்த எண்ணிக்கை 2036ம் ஆண்டு 34.7% என்பதாக அதிகரிக்கும்.

உலகளவில், 30 அல்லது அதற்கு கீழுள்ள மக்கள்தொகையை சராசரியாக கொண்ட நாடுகள், இளம் மக்கள்தொகை கொண்ட நாடுகளாக குறிப்பிடப்படுகின்றன.

தற்போதைய நிலையில், சராசரி வயதுகொண்ட அமெரிக்க மக்கள்தொகை 38.5% என்பதாகவும், சராசரி வயதுகொண்ட சீன மக்கள்தொகை 38.4% என்பதாகவும், சராசரி வயதுகொண்ட பிரிட்டன் மக்கள்தொகை 40.06% என்பதாகவும், சராசரி வயதுகொண்ட ஜெர்மனி மக்கள்தொகை 47.08% என்பதாகவும் உள்ளது.

இந்திய மக்கள்தொகை, வரும் 2036ம் ஆண்டில் 151.08 கோடியாக அதிகரிக்கும். அதேகாலக்கட்டத்தில், இந்தியாவில் 15 வயதிற்குட்பட்டோருக்கான மக்கள்தொகை 19.8% என்ற அளவில் குறைந்து காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.