Random image

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி……கடனை திருப்பி அடைக்க இந்தியாவுக்கு ரூ.68,500 கோடி கூடுதல் செலவு

டில்லி:

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக இந்தியாவின் கடனுக்கு கூடுதலாக ரூ.68,500 கோடியை திருப்பி செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 72 ஆக வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் நடப்பு கணக்கு கடுமையான பற்றாகுறை ஏற்பட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மட்டுமே இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் இல்லை என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு மட்டும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 11 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக நாட்டின் குறுகிய கால கடனை அடைக்க கூடுதலாக ரூ.68 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்கும் ரூபாயின் மதிப்பு 73 என்ற நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பாரல் கச்சா எண்ணெய் விலை 76 டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.