கொரோனா: இந்தவாரம் வுகானுக்கு மருத்துவப் பொருட்களை அனுப்புகிறது இந்தியா!

டெல்லி:

லக நாடுகளை மிரட்டி வரும் உயிர்க்கொல்லி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு இந்தியா மருத்துவப் பொருட்களை அனுப்பி உதவி செய்ய உள்ளது. இதற்கான தனி விமானம் இந்த வாரம் இறுதியில் சீனாவின் வுகான் மாநிலத்துக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சீனாவின் வுகான் மாநிலத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகி நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் தொற்று இதுவரை 1600க்கும் மேற்பட்டோர் மரணத்தை தழுவிய நிலையில், இந்தியா தரப்பில் மருத்துவ உதவிகள் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி,  சீனாவுக்கு உதவும் வகையில் இந்தியா விரைவில் மருந்துகளை அனுப்பி வைக்க உள்ளது.

இதுகுறித்து, சீனாவின்  பீஜிங்கிலுள்ள இந்தியத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளி யிடப்பட்டுள்ள வீடியோவில், சீனாவுக்கான இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரி இது குறித்த தெரிவித்துள்ளார்.

அதில், சீனாவுடனான ஒற்றுமை, நட்பு, நல்லுறவை பறைசாற்றும் வகையில் மருந்துகள் அனுப்பப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். முன்னதாக சீன அதிபருக்கு எழுதிய கடிதத்தில், தேவையான உதவிகளை செய்ய தயார் என பிரதமர் மோடியும் தெரிவித்திருந்தார்.

சீனாவுக்கு தேவயான  மருத்துவர்களுக்கான கையுறை, மூகமூடி, மருத்துவ உடை மற்றும்  மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றை இந்தியா சீனாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

அதன்படி, மருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு  இந்த வாரம் இறுதியில் தனி விமானம் சீனாவின் வுகான், ஹுபே  மாநிலங்களுக்கு செல்ல இருப்பதாகவும்,  இந்த விமானம் இந்தியா திரும்பும்போது, அங்குள்ள இந்தியர்கள் விரும்பினால் இந்தியாவுக்கு வரலாம் என்றும்,  அண்டை நாடுகளிலிருந்து வந்தவர்களும் வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.