ரஷ்ய ஒப்பந்த எதிரொலி விரையில் தெரியும் : இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்

னது பேச்சை மீறி ரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் செய்துக் கொண்டதற்காக இந்தியா மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக டிரம்ப் எச்சரிக்கை செய்துள்ளார்.

ரஷ்யாவிடம் எஸ் 400 ஏவுகணை வாங்க இந்தியா முடிவு செய்தது. இந்த முடிவு செய்து 4 ஆண்டுகள் ஆகியும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. தற்போது ரஷ்யா இந்த ஒப்பந்தம் குறித்து இந்தியாவிடம் பேச்சு வார்த்தை தொடங்கியது. இந்த ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்கக்கூடாது என இந்தியாவை அமெரிக்கா எச்சரித்தது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் செய்துக் கொண்டால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். ஆயினும் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்த போது கடந்த வாரம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இது அமெரிக்காவுக்கு கடும் கோபத்தை உண்டாக்கி உள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினர். அதற்கு டிரம்ப், “இந்த விவகாரத்தில் எனது முடிவையும் நடவடிக்கையும் விரைவில் இந்தியா அறிந்துக் கொள்ளும்’ என பதில் அளித்தார். செய்தியாளர்கள், “அந்த முடிவை எப்போது அறிவிப்பீர்கள்?” என மீண்டும் கேட்டனர். அதற்குடிரம்ப், “நீங்கள் நினைப்பதற்கு முன்பே” என விடை அளித்தார்.