அடிலெய்டில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 6விக்கெட் வித்யாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தில் இந்தியா வெற்றிப்பெற்றது. விராட் கோலியின் சதமும், தோனியின் விடா முயற்சியினாலும் வெற்றிப்பெற்ற இந்தியா ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளது.

odi

முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் ஆரோன் பிஞ்ச் மற்றும் அலெக்ஸ் காரே ஆட்டத்தை தொடங்கினர். அவர்களுக்கு சவால் விடும் வகையில் இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் மற்றும் ரவீந்திர ஜடேஜா பந்து வீசினர். இதனால் ஆரோன் 6 ரன்களிலும், அலெக்ஸ் கேரி 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஷான் மாா்ஸ் சிறப்பாக விளையாடி 123 பந்துகளில் 130 ரன்கள் குவித்தாா். அவருக்கு துணையாக விளையாடிய மேகஸ்வெல் 48 ரன்கள் சோ்த்தாா்.

koli

40 ஓவர்கள் முடிவில் அஸ்திரேலிய அணி 205 ரன்களை எடுத்திருந்த நிலையில் கடைசி 10 ஓவர்களில் 93 ரன்களை குவித்திருந்தது. இறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் சேர்த்திருந்தது. இந்திய அணி சாா்பில் புவனேஷ்வா் குமாா் 4 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. முதலில் ஆட்டத்தை தொடங்கிய ரோஹித் சர்மா 43 ரன்களிலும், ஷிகர் தவான் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் பேட்டிங் செய்த விராட் கோலி சதம் அடித்து அசத்தினர். கோலி 112 பந்துக்கள் எதிர்க்கொண்டு 104 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த அம்பத்தி ராயுடும் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.

doni

இதையடுத்து இணை சேர்ந்த மகேந்திர சிங் தோனி மற்றும் தினேஷ் கார்த்தி நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினர். தோனி அரைசதம் கடந்து 55 ரன்கள் எடுத்தார். இறுதியாக 4 பந்துக்களே இருந்த நிலையில் வழக்கம் போல் தோனி சிக்ஸர் அடித்து வெற்றிப்பெற்றார். இதையடுத்து 4 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்து, இந்திய அணி வெற்றி பெற்றது. 104 ரன்கள் குவித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இந்திய அணி 1-1 என சமன் செய்துள்ளது. 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 18ஆம் தேதி மெல்போர்னில் நடைபெற உள்ளது.