கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் இலங்கையை தோற்கடித்த இந்தியா

டில்லி

லங்கை – இந்தியா இடையிலான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் டிராவில் முடிந்து டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா  வரிசையாக 9 கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.  தற்போது இலங்கையுடன் விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் இந்தியா வெற்றி பெற்றது.   மற்ற இரண்டும் டிராவில் முடிந்தது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று இலங்கை அணி இரண்டாவது இன்னிங்க்சில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன் எடுத்துள்ள நிலையில் இரு அணியும் போட்டியை முடித்துக் கொள்ள சம்மதம் தெரிவித்ததால் போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.    இந்திய அணி 1-0 என்னும் கணக்கில் டெஸ்ட் தொடரில் வெற்றி வாகை சூடியுள்ளது.

You may have missed