கலப்பு இரட்டையர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவிற்கு வெள்ளி

ஆசிய விளையாட்டு போட்டியின் 400 மீட்டர் ரிலே ஓட்டத்தில் இந்தியாவை சேர்ந்த ஹீமா தாஸ், பூவம்மா ராஜூ, முகம்மது அனஸ், ராஜீவ் ஆரோக்யா ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர்.

relay

18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் உள்ள ஜகர்த்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய சார்பில் 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். 10 வது நாள் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவு ரிலே ஓட்டப்பந்தயம் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது.

இந்த கலப்பு இரட்டையர் பிரிவு 400 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் முகம்மது அனஸ், பூவம்மா, ஹீமாதாஸ் மற்றும் ராஜீவ் ஆரோக்யா பங்கேற்றனர். ரிலே போட்டியில் இந்த நான்கு பேர் மீதும் அதிகளவில் எதிர்ப்பார்ப்பு இருந்தது. அதன்படியே, ஆண் – பெண் – பெண் – ஆண் என்ற கோர்வையில் நடைபெற்ற ரிலோ போட்டியில் இந்தியாவை சேர்ந்த 4 பேரும் அதிவேகத்தில் செயல்பட்டு 3:15:71 நொடிகளில் இரண்டாம் இடம் பிடித்தனர்.

இதன் மூலம் இந்தியாவிற்கு நான்கு பேரும் வெள்ளிப்பதக்கம் வாங்கித்தந்து பெருமைத் தேடியுள்ளனர். இதுவரை இந்தியா 8 தங்கம், 13 வெள்ளி மற்றும் 20 வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.