ஹாக்கி தொடர்: இந்திய பெண்கள் அணி வெற்றி; ஆண்கள் அணி தோல்வி

download-1இந்தியா – ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையேயான ஹாக்கி தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதலாவது ஹாக்கி போட்டி நேற்று நடந்தது. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1–0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்திய அணி கேப்டன் ராணி ராம்பால் அடித்த கோல் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.

அதேவேளை, ஆஸ்திரேலியாவில் 4 நாடுகளுக்கு இடையே நடைபெறும் ஆண்கள் ஹாக்கி போட்டி தொடரில், இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதின. அப்போட்டியில், இந்திய அணி 2–3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்துள்ளது.