மிரட்டல் ஆட்டத்தினால் பாகிஸ்தானை பந்தாடிய மிதாலி ராஜ்!!

மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய மகளிரணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மகளிரணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றுள்ளது.

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய மகளிரணி 34 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து மகளிரணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

indian

இதையடுத்து, கயானாவில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் இந்திய மகளிரணியும், பாகிஸ்தான் மகளிரணியும் மோதின. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், சிறப்பாக விளையாடிய பிஸ்மா மரூப் மற்றும் நிடா டார் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் குவித்தது.

134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் நட்சத்திர வீராங்கனையான மிதாலி ராஜ் கடைசி கட்டம் வரை சிறப்பாக விளையாடி 56 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்ற வீராங்கனைகள் அவருக்கு உறுதுணையாக விளையாடினர். இதனால், இந்திய மகளிரணி 19 ஓவர்களிலேயே 3 விக்கெட்கள் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.

இதன்மூலம் இந்திய மகளிரணி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சிறப்பாக விளையாடிய மிதாலி ராஜ் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.