மகளிர் கிரிக்கெட் போட்டி: இந்திய மகளிர் அணி வெற்றி

X during the Women's ICC World Twenty20 India 2016 match between West Indies and India at IS Bindra Stadium on March 27, 2016 in Mohali, India.
X during the Women’s ICC World Twenty20 India 2016 match between West Indies and India at IS Bindra Stadium on March 27, 2016 in Mohali, India.

மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று விஜயவாடாவில் 3–வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்றது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 49.1 ஓவர்களில் 184 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் வேத கிருஷ்ணமூர்த்தி 71 ரன்கள் எடுத்ததே அதிக பட்ச ஸ்கோர். இந்த வெற்றி மூலம், 3–0 என தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்திய மகளிர் அணி.