கோல்ட் கோஸ்ட்

ஆஸ்திரேலியா காமன்வெல்த் 2018 ல் 10 மீட்டர் தூர துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மானு பேகர் தங்கமும், ஹீனா சிந்து வெள்ளியும் வென்றுள்ளனர்.

காமன்வெல்த் 2018 போட்டியில் நான்காம் நாளான இன்று பளுதூக்கும் போட்டியில் பூனம் யாதவ் தங்கப் பதக்கம் வென்றது தெரிந்ததே.

தற்போது இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கமும் வெள்ளிப் பதக்கமும் கிடைத்துள்ளது.

10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் தூரப் பிரிவில் இன்று போட்டி நடந்தது.

இதில் இந்தியாவை சேர்ந்த 16 வயதே ஆன மானு பேகர் தங்கப் பதக்கம் வென்றார்.

மற்றொரு இந்திய வீராங்கனை ஹீனா சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இன்றைய போட்டிகளில் இதுவரை இந்தியா இரு தங்கப் பதக்கம் வென்றுள்ளது.