3வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி!! தொடரையும் கைப்பற்றியது

கான்பூர்:

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒரு நாள் போட்டி கான்பூர் நகரில் இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சினை தேர்வு செய்தது.

இதனை அடுத்து விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்திருந்தது. நியூசிலாந்து அணி வெற்றி பெற 338 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 331 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரை 2:-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.