பார்வையற்றோர் கிரிக்கெட்…இந்தியா உலக சாம்பியன்

பெங்களூரு:

பார்வையற்றோர் 20:20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.


இந்தியாவில் பார்வையற்றோர் 20:20 கிரிக்கெட் தொடர் நடந்தது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இன்று நடந்த இறுதி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களின் 8 விக்கெட்களை இழந்து 197 ரன்கள் எடுத்தது. பதார் 57 ரன்கள், முகமது 24 ரன்கள், ஆமிர் 20 ரன்கள் எடுத்தனர்.

இதை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 17.4 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிரகாஷ் ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: india won blind cricket world cup at bamglore, பார்வையற்றோர் 20:20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது
-=-