ஆசிய மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன்!!

ககாமிகாஹரா:

ஆசிய பெண்கள் ஹாக்கி இறுதி போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

 

9-வது ஆசிய கோப்பை பெண்கள் ஹாக்கி போட்டி ஜப்பானில் நடந்தது. இதில் இன்று பிற்பகல் இறுதி போட்டி நடந்தது. இதில் 2 முறை சாம்பியனான சீனா, 2004-ம் ஆண்டு சாம்பியனுமான இந்தியா அணிகள் மோதின.

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1:1 என்ற கணக்கில் சம நிலையில் இருந்ததால் பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. சூட் அவுட் முறையில் 5:4 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் 2018ம் ஆண்டு உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கு தன்னுடைய இடத்தை இந்தியா பதிவு செய்தது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: india won championship in Asian women hockey, ஆசிய மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன்!
-=-