பிரிடோரியா: 19 வயதுக்குட்பட்டோருக்கான ‘யூத் 19’ என்ற கிரிக்கெட் தொடரில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 69 ரன்களில் வீழ்த்தியது.

இத்தொடரில் மொத்தம் 4 நாடுகள் கலந்துகொண்டன. இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகியவைதான் அந்நாடுகள்.

இதில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் தேர்வு பந்துவீச்சாக இருந்தது.

இந்திய அணியில், துருவ் 101 ரன்களும், திலக் வர்மா 70 ரன்களும் சித்தேஷ் 48 ரன்களும் அடிக்க, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்களைக் குவித்தது இந்தியா.

பின்னர் எளிய இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்காவால் நினைத்ததை சாதிக்க முடியவில்லை. அந்த அணியின் ஜாக் லீஸ் 52 ரன்களும், ஜோனதன் 39 ரன்களும் அடித்தனர்.

ஆனாலும், 43.1 ஓவர்களிலேயே அன‍ைத்து வீரர்களும் அவுட்டாகி 190 ரன்களுக்கே சரண்டராகிவிட்டது தென்னாப்பிரிக்கா. இந்திய தரப்பில் அதிகபட்சமாக அதர்வாவிற்கு 4 விக்கெட்டுகள் கிடைத்தன.