ஆசிய மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் தங்கம் வென்றார்

--

டில்லி:

ஆசிய ஜூனியர் சாம்பியன் ஷிப் மல்யுத்தம் போட்டி டில்லியில் கடந்த 17ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைந்தது.

இன்று நடந்த 74 கிலோ எடைப் பிரிவு ’பிரீ ஸ்டைல்’ இறுதி போட்டியில் இந்திய வீரர் சச்சின் ரதியும், மங்கோலியா வீரர் பாட் எர்டெனும் மோதினர்.

இதில் சச்சின் ரதி, மங்கோலிய வீரரை அபாரமாக வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். தங்கம் வென்ற சச்சின் ரதிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.