உலக கோப்பை வில்வித்தை போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை

உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி முதல்முறையாக தங்கம் வென்றார். உலக கோப்பைக்கான வில்வித்தை போட்டி அமெரிக்காவில் உள்ள சால்ட் லேக் நகரத்தில் நடைபெற்று வந்தது. பெண்களுக்கான தனிப்பிரிவில் பங்கேற்ற தீபிகா குமாரி இறுதி சுற்றுக்கு முன்னேறி சென்றார். இறுதி சுற்றில் தீபிகா குமாரி ஜெர்மனியை சேர்ந்த மிட்செல் க்ரோப்பனை எதிர்கொண்டார்.
deepika kumari
முதல் செட் போட்டியில் 29 புள்ளிகள் எடுத்து தீபிகா குமாரி முன்னனிலை வகித்தார். அடுத்த செட்டில் இருவரும் தலா ஒரு புள்ளிகள் எடுத்த நிலையில் போட்டி டிராவில் முடிந்தது. மூன்றாவது செட்டில் மிட்டெல் ஒரு புள்ளிகள் எடுத்து தீபிகாவை சமன் செய்தார்.

இதனை தொடர்ந்து 4 மற்றும் 4வது சுற்றில் சிறப்பாக அம்புகளை எய்திய தீபிகா குமாரி 29 மற்றும் 27 புள்ளிகளை பெற்று மீண்டும் முன்னிலையில் இருந்தார். இரு சுற்றிலும் ஜெர்மனி வீராங்களை தலா 26 புள்ளிகளை பெற்றதால் பின்னுக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் 7-3 என்ற புள்ளிகளில் தீபிகா குமாரி வெற்றிப்பெற்று தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார்.

இதற்கு முன்பு 2011,2012,2013 மற்றும் 2015 ஆண்டுகள் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் இறுதிச்சுற்று வரை சென்ற தீபிகா குமாரி வெள்ளிப்பதக்கத்தை மட்டுமே வென்றார். தனது தொடர் முயற்சிகள் மூலம் தற்போது தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

வாழ்த்துக்கள் தீபிகா குமாரி.

You may have missed