மெல்பர்ன் 3 ஆவது டெஸ்ட் : இந்தியா 150 ஆம் டெஸ்ட் வெற்றி

மெல்பர்ன்

ந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3 ஆவது கிரிக்கெட் டெஸ்ட் பந்தயத்தில் இந்தியா 137 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் பயணம் செய்து வருகிறது. இது வரை இரு அணிகளுக்கும் இடையில் இரு டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் மெல்பர்ன் நகரில் மூன்றாம் டெஸ்ட் பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் இன்னின்ங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் எடுத்த இந்தியா டிக்ளேர் செய்தது. அதை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 66.5 ஓவரில் 151 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அப்போது இந்தியா 292 ரன்கள் முன்னிலையில் இருந்ததால் ஆஸ்திரேலியாவை ஃபாலோ ஆன் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியா தனது இரண்டாம் இன்னிங்சை வீளையாடியது.

இரண்டாம் இன்னிங்சில் இந்திய அணி 106 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. வெற்றி க்கு இலக்காக 399 ரன்கள் என்னும் நிலையில் ஆஸ்திரேலியா இரண்டாம் இன்னிங்சில் இறங்கியது. இந்திய அணியின் அபார பந்து வீச்சினால் ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி 261 ரன்கள் மட்டுமே எடுத்து ஆடமிழந்தது. கம்மின்ஸ் அரை சதம் அடித்தார்.
அதை ஒட்டி இந்தியா 137 ரன்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த வெற்றி முலம் இந்தியா 2:1 என்னும் விகிதத்தில் முன்னிலையில் உள்ளது. வரும் 3 ஆம் தேதி சிட்னி நகரில் 4 ஆம் டெஸ்ட் பந்தயம் நடைபெற உள்ளது. அந்த போட்டியில் இந்தியா வென்றாலோ அல்லது டிரா செய்தாலோ தொடரில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியா வென்றால் தொடர் சம நிலையில் நிறைவு பெறும்.

இது இந்தியாவின் 150 ஆம் டெஸ்ட் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி