ஜுனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் அரை இறுதியில் இந்தியா அபார வெற்றி

கிறிஸ்ட் சர்ச்,  நியுஜிலாந்து

நியுஜிலாந்து ஜுனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அரை இறுதிப்ப்ட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்துள்ளது.

நியுஜிலாந்தில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது அரை இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.    இதில் பாகிஸ்தானும் இந்தியாவும் மோதின.   டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.    மொத்தம் 50 ஓவரில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன் குவித்தது.

அடுத்து விளையாடிய பாக் அணிக்கு வெற்றி இலக்காக 273 ரன்கள் இருந்தது.    இந்திய அணியின் வீரர்களில் பந்து வீச்சில் பாகிஸ்தான் அணியினர் ஒருவர் பின் ஒருவராக ஆட்டம் இழந்தனர்.   மிகச் சொற்ப ரன்களிலேயே அவர்கள் ஆட்டம் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.     29.3 ஓவரில் 69 ரன்கள் மட்டுமே இழந்து பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் ஆட்டம் இழந்தனர்.

இதன் மூலம் இந்தியா 203 ரன்கள் வித்யாசத்தில் அரை இறுதியில் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.