3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி….தொடரையும் கைப்பற்றியது

விசாகப்பட்டினம்:

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில்இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. முதல் 2 போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தது. 3வது போட்டி விசாகப்பட்டனத்தில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இலங்கை அணி 44.5 ஓவரில் 215 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்தியா வீரர்கள் குல்தீப், சகால் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து விளையாடிய போது இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 7 ரன்னில் அவுட்டானார். ஸ்ரேயாஸ் ஐயர் (65) அரை சதமடித்தார். பொறுப்பாக ஆடிய ஷிகர் தவான், சதமடித்தார்.

இந்திய அணி 32.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தவான் (100), தினேஷ் கார்த்திக் (26) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் தனஞ்செயா, பெரேரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.

கார்ட்டூன் கேலரி