இறுதி போட்டியை அசத்தலாக வென்ற இந்தியா – சமனில் முடிந்த டி20 தொடர்!

--

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்யாசத்தில் வெற்றிப்பெற்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. அதன்படி நடைபெற்ற முதல் டி20 போட்டியை ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றது. அதன்பிறகு நடைபெற்ற 2வது டி20 போட்டி மழை குறுக்கிட்டதால் ரத்து செய்யப்பட்டது.

t20

இந்நிலையில் இன்று 3வது டி20 போட்டி நடைபெற்றது. சிட்னியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பின்ச் 28 ரன்களிலும், ஷார்ட் 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து பேட்டிங் செய்த பிற வீரரகள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.

இறுதியில் ஸ்டோனிஸ் கைக்கொடுக்க ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு வைக்கப்பட்டது. இதில் இந்திய வீரர் குர்னால் பாண்டியா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

குறிப்பிட்ட ரன்களையே இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தவான் 41 ரன்களிலும், ரோஹித் சர்மா 23 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அரை சதம் கடந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.

இதனால் இந்திய அணி 19.4 ஓவர்களில் 4விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை எடுத்தது. இதையடுத்து, இந்த போட்டியை 6 விக்கெட் வித்யாசத்தில் இந்திய அணி வென்றது. இதன் காரணமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

இரு அணிகளும் மோது முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 6ம் தேதி தொடங்க உள்ளது.