தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள 3வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் இரு போட்டிகளில் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றியுள்ள நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ராஞ்சியில் தொடங்குகிறது. கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பெறும் முனைப்பில் தென்னாப்பிரிக்க அணியும், இந்தப் போட்டியிலும் வென்று தொடரை வொயிட் வாஷ் செய்ய இந்திய அணியும் களமிறங்க உள்ளது.

பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் இந்திய அணி பலம் வாய்ந்ததாகவே இருக்கிறது. இன்று விளையாடும் இந்திய அணியில், ரோகித் ஷர்மா, மாயங்க் அகர்வால், சிட்டேஸ்வர் புஜாரா, விராத் கோஹ்லி, அஜின்கியா ரகானே, ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சாஹா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷாபாஸ் நதீம், உமேஷ் யாதவ் மற்றும் மோகித் ஷர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இப்போட்டியில் ரோகித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இன்று விளையாடும் தென்னாப்பிரிக்க அணியில், டீன் எல்கர், குவின்டன் டி காக், சுபைர் ஹம்சா, டூபிளசிஸ், பவுமா, க்ளாசன், லிண்டே, பீய்ட், ரபாடா, நார்ட்ஜே, லுங்கி நிகிடி ஆகியோர் களமிறங்குகின்றனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: #indvsa india vs south africa, ba tv, ind vs sa, India vs South Africa, india vs south africa 2018, india vs south africa 2019, india vs south africa 2nd test, india vs south africa series 2019, india vs south africa test, indvsa, indvsa live, indvsri, indvssa test highlights, live score india, Oval, Virat Kohli
-=-