20:20 கிரிக்கெட்…3வது போட்டியிலும் இந்தியா வெற்றி

மும்பை:

இலங்கை அணிக்கு எதிரான 3வது 20:20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டுவென்டி- டுவென்டி போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் 2 போட்டியில் வென்ற இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. 3வது மற்றும் கடைசி போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் சகால், பும்ராவுக்கு பதில் சிராஜ், வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பு பெற்றனர். இந்திய அணிக்கு 136 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை அணி.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே 2 போட்டிகளை வெற்றி பெற்று தொடரை வென்ற இந்திய அணி 3வது போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.