”உலக கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்துவது எளிதல்ல” – ஐசிசி தலைவர்

உலக கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்துவது எளிதானது இல்லை என ஐசிசி தலைர் டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 2016ல் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு வரி சலுகை வழங்கியதற்கு ரூ. 160 கோடி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வழங்க வேண்டும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது இந்தியா 2023 உலகக் கோப்பை போட்டியை நடத்துவதில் பிரச்னை இருக்காது என ஐசிசி தெரிவித்துள்ளது.

icc

இதற்கு முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் சிங்கப்பூரில் நடந்த ஐசிசி கூட்டத்தில், பிசிசிஐ-க்கு வரிசலுகை அளித்ததன் பெயரில், வரிசலுகை தொகையை விரைவில் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை அந்த தொகையை பிசிசிஐ வழங்கவில்லை.

அப்படி இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ரூ.160 கோடியை செலுத்தாவிட்டால், பிசிசிஐ வருவாய் தொகையில் இருந்து அந்த தொகை கழித்துக் கொள்ளப்படும். அதோடு 2021ல் இந்தியாவில் நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் டிரோபி மற்றும் 2023ல் இந்தியாவில் நடக்க இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்கள் வேறு நாடுகளுக்கு மாற்றப்படும் என ஐசிசி மிரட்டல் விடுத்திருந்தது.

icc

இந்நிலையில் ஐசிசி தலைவர் டேவிட் ரிச்சர்ட்சன், “ 2021ல் சாம்பியன்ஸ் டிரோபி மற்றும் 2023ல் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்கள் இந்தியாவில் நடக்கும்” என தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, உலக கோப்பை 2019 தொடரில் இந்திய அணியை வீழ்த்துவது கடினர். பல வருடங்களாக இங்கிலாந்து அணி சிறப்பான அணியாக உள்ளது. அதேபோல் தென் ஆப்ரிக்கா அணி திறமையான வீரர்களை கொண்டு பலமுறை உலக கோப்பை தொடரை சந்துத்துள்ளன. ஆனால் அவர்களால் ஒருமுறை கூட உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை.

தற்போது எந்த அணி கோப்பையை வெல்லும் என கணிப்பது கடினமான விஷயம். ஆனால், எந்த அணியாக இருந்தாலும், விராட் கோலி தலைமையிலான இந்தியாவை வீழ்த்துவது மிகவும் கடினமாக செயலாக இருக்கும். தற்போதுள்ள சூழலில் இந்திய அணியில் செயல்பாடு மிக சிறப்பானதாக உள்ளது. இதனால் இந்த தொடர் இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என ஐசிசி தலைவர் டேவிட் ரிச்சட்சன் கூறியுள்ளார்.

இவ்வாறு திடீரென இந்தியாவுக்கு சாதகமாக ஐசிசி தலைவர் பேசிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளத்.