பெங்களூரு:
ன்று டில்லியில் கூடிய காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு வரும் 21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீரை திறக்க உத்தரவிடப்பட்டது.  இந்த தகவல் வெளியானதுமே கேஆர்எஸ் அணை அமைந்துள்ள, மண்டியா மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்.
manya345-19-1474289235
பெங்களூரு-மைசூரு நகரங்கள் இடையே அமைந்துள்ள மாண்டியா நகரின் சஞ்சய் சர்க்கிளில், விவசாயிகள் சுமார் இருபதுபேர்  சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கர்நாடக, தமிழக அரசுகளை கண்டித்து விவசாயிகள் முழக்கமிட்டனர். போக்குவரத்துக்கு இடையூறு செய்ய வேண்டாம் என போலீசார் கோரிக்கைவிடுத்தபோது அவர்களுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதே நேரம், தற்போது காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் கூறப்பட்டுள்ள விநாடிக்கு 3000 கன அடி நீர் என்பது குறைந்த அளவுதான் என்று பொது நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.