இந்தியன்2_விபத்து: ஒரு பார்வை….

நெட்டிசன்:

Muthu Sivakumar முகநூல் பதிவு…

#இந்தியன்2_விபத்து_ஒரு_பார்வை

முதலில் விபத்து நடந்தது கிரேன் என்ற பாரந்தூக்கி என்று பரவலாக செய்திகளில் வந்தது..

படத்தை நாம் பார்த்தபோது அது பாரந்தூக்கி அல்ல பூம்லிப்ட் எனப்படும் ஒரு வகை நகரும் இயந்திரம்..

இதை இயக்க பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றவன் நான்…

பொதுவாக இங்கே இதுபோல விபத்துக்கள் நடக்க வாய்ப்பு குறைவு..

அதையும் மீறி நடக்கும்போது அந்த விபத்தை ஆய்வு செய்து எதனால் விபத்து நேர்ந்தது என்பதன் Root Cause யையும் அதன் பொருட்டு பின்வரும் காலங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை தொகுத்து Incident report ஆக அனுப்பிவைக்கும் பணியும் எனக்கு இருந்தது…

இந்த விபத்தை பார்த்த உடனேயே தெரிந்துகொண்டேன் இதற்காக காரணத்தை..

முழுக்க முழுக்க இதற்கு காரணம் மனிதத்தவறு..

இந்த Boomlift என்பது உயரமான கட்டிடங்களுக்கு வெளிப்புறம் இருந்தவாறு சிலவேலைகளை செய்ய பயண்படுத்தவேண்டும்..

கிட்டத்தட்ட இதன்கூடையில் 500கிலோவுக்கு மேல் பாரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்..

அதனுடைய இயக்கம் கூடையிலே இருக்கும்.

இரண்டு ஆள் கொஞ்சம் வேலைக்கு வேண்டிய பொருள்கள் தவிர மேலே அதிகமாக பாரம் ஏற்றக்கூடாது..

மேலே உள்ள ஆள் முழு உடல்பாதுகாப்பு உடல்வார் பட்டையை அணிந்து நங்கூரமிட்டுருக்கவேண்டும்..

தலைக்கவசம் கட்டாயமாக போட்டிருக்கவேண்டும்..

செல்ல வேண்டிய உயரத்திற்கு சென்றதும் வண்டியின் இயக்கத்தை நிறுத்தி Safemode ல் இயங்க வைக்கவேண்டும்..

குறிப்பாக சரியான அளவில் வண்டியை நிறுத்தி சமதளத்தில் Parking செய்தபிறகே உயரத்திற்கு செல்லவேண்டும்..

உயரத்தில் இருக்கும்போது வண்டியை முன்னும் பின்னும் நகர்த்தவே கூடாது மீறி நகர்த்தும் போது அது கவிழும் சாத்தியம் 90% உண்டு..

அதேபோல வண்டியின் கூடைக்கும் தரைக்குமான இடைவெளி 45டிகிரி கோனத்துக்கு மேலே போகக்கூடாது
மீறினால் வண்டி கவிழும் சாத்தியம் அதிகரித்து இருப்புநிலை தடுமாறி விழுந்துவிடும்..

இந்த படத்தை பார்த்தால் ஒரு பெரிய விளக்கு தொகுதியை அந்த கூடையில் பொருத்தியிருக்கிறார்கள்..

கிட்டத்தட்ட கூடையின் தாங்கும் திறனை விட விளக்கு தொகுதியின் எடை அதிகம்..

அதாவது கூடையின் தாங்கும்திறன் 500கிலோ என்பது தரையில்தான் உயரம் செல்ல செல்ல புவியீர்ப்பு விசையின் காரணமாக எடையின் அளவு அதிகரிக்கும்..

அந்த Multiply கணக்கை இங்கே போட்டு உங்களை குழப்பவேண்டாம்..

அது போல ஆள் மட்டுமே செல்லவேண்டிய பூம்லிப்டில் ஆளவுக்கதிகமாக எடையை ஏற்றி அதை படக்காட்சி களுக்கு தோதாக முன்னும் பின்னும் நகர்த்தி விபத்தை ஏற்படுத்திவிட்டார்கள்..

உலகநாடுகளில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை படத்திற்கு பயன்படுத்தி வரும் சங்கர் மற்றும் கமலஹாசன் படப்பிடிப்புதளத்திற்கு ஒரு WSH பாதுகாப்பு அதிகாரியை நியமித்து படப்பிடிப்பு தளத்தில் உள்ளவர்களை பாதுகாக்க தவறியது விந்தைதான்..

இந்த விஷயத்தில் தமிழகஅரசின் தொழிலாளர் நலத்துறை மற்றும் மனிதவளத்துறை சிறப்பு கவனம் செலுத்தி தொழிலாளர்கள் பாதுகாப்புக்காக புதிய சட்டவிதிகளை இயற்ற வேண்டும் என்பது ஒரு வேலையிடபாதுகாப்பு சுகாதார மேற்பார்வையாளனாக எனது ஆசை..

விபத்தில் இறந்தவர்களுக்கு முறையான இழப்பீடை பெற்றுத்தர வேண்டும்..

இறந்த நபர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Indian 2 Accident: A View of Boom lift operator…., Indian2, Indian2 Accident, இந்தியன்2, கமல்ஹாசன், ஷங்கர்
-=-