ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 📽’இந்தியன் 2′ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகின்ற 19ம் தேதி துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பே கமலின் வயதான தோற்றத்தில் மாற்றம் செய்து படப்பிடிப்பை நடத்தினர். படமாக்கிய காட்சிகளை பார்த்தபோது அந்த தோற்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு திருப்தி ஏற்படவில்லை. இதனால் படப்பிடிப்பை நிறுத்தினர்.

இந்நிலையில் ⭐கமல்ஹாசனின் வயதான தோற்றத்தையும் மீண்டும் மாற்றி உள்ளனர். கடந்த சில நாட்களாக ஹாலிவுட் மேக்கப் கலைஞர்களை வைத்து இந்த வயதான தோற்றத்தை உருவாக்கியதாகவும், புதிய தோற்றத்தில் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் திருப்தியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த தோற்றத்தை வெளியிட உள்ளனர்.