வதந்திகளுக்கும் சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது ‘இந்தியன் 2’ படக்குழு….!

‘இந்தியன் 2’ படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் என ஒவ்வொருவராக மாறிக் கொண்டே இருந்தார்கள்.

சமீபத்தில் கமலின் காலில் செய்த அறுவை சிகிச்சையில் வலி அதிகமாகவே மீண்டும் அறுவை சிகிச்சை செய்தார் கமல். இதனால் சில காலம் படப்பிடிப்பு தடைப்பட்டது.

அதன் பின் படப்பிடிப்பு தொடங்கிய சமயத்தில் கிரேன் அறுந்து விழுந்து படக்குழுவைச் சேர்ந்த பணியாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறக்க, 9 பேருக்குக் காயம் ஏற்பட்டது.

தற்போது கொரோனா பாதிப்பால் ஊரடங்கு. இதனிடையே சில வாரங்களுக்கு முன்பு, ‘இந்தியன் 2’ படத்தை கைவிட்டு விட்டார்கள் என்று தகவல் பரவியது.

இந்நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தவுடனே, ‘இந்தியன் 2’ படத்தின் எடிட்டிங் பணிகளை படக்குழு தொடங்கிவிட்டது.

இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தவுடனே, ‘இந்தியன் 2’ படத்தின் எடிட்டிங் பணிகளை படக்குழு தொடங்கிவிட்டது.